Published on 06/12/2018 | Edited on 06/12/2018

உத்தரப்பிரதேசம் மாநிலம் பதுவான் நகரில் பாஜக சார்ந்த அமைப்புகள் அண்ணல் அம்பேத்கர் காவி நிற கோட் அணிந்திருப்பதுபோல சிலை அமைத்து நிறுவினார்கள். இது அங்கு கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் அந்த சிலையில் கோட்டை வழக்கம்போல நீல வண்ணத்தில் பெயிண்ட் அடித்தார்கள். சமீப காலமாக தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அம்பேத்கரை பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் உரிமை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.