அயோத்தி தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டுமக்களுக்கு காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி,
இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு இந்த நாள் சிறந்த உதாரணம். மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. உச்சநீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது இந்த தீர்ப்பின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. கர்தார்பூரில் இன்று புதிய வழித்தடம் உருவாகியுள்ளது போல் இங்கும் இன்று புதிய பாதை உருவாகியுள்ளது.
வேற்றுமையும், எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று. புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான தீர்ப்பு இது. தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கு உண்டு. புதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை. இந்த தீர்ப்பை ஏற்றகொண்ட விதம் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மத நல்லிணக்கத்திற்கான சான்று என்றார்.