மக்களவை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்று பிரதமரான நரேந்திர மோடிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த பரிசு பொருட்கள் அனைத்தும் வரும் 14 ஆம் தேதி ஏலத்தில் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![modis gift in auction](http://image.nakkheeran.in/cdn/farfuture/eSSuBoDz-pvPyWunWeMD8SkwNzgsRWEAse9-zirCzj4/1568202858/sites/default/files/inline-images/modi-sad_0.jpg)
இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் கூறுகையில், "பிரதமர் மோடி பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது, அவருக்கு பல்வேறு தரப்பினரும் அன்பளிப்பாக பல பொருட்களை வழங்குகிறார்கள். இந்த பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்க பிரதமர் மோடி விரும்புகிறார். அதன்படி பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 2,772 பொருட்கள் வரும் செப்டம்பர் 14-ம் தேதி முதல் ஏலத்தில் விடப்படுகிறது. இந்த பொருட்களின் அடிப்படை விலையை பொறுத்தவரையில் குறைந்தபட்ச தொகையாக ரூ. 200-ம் அதிகபட்ச தொகையாக ரூ. 2.5 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.