பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் சுற்று பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காக இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்டார்.
முதலில் இன்று பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி நாளை வரை அங்கு தங்குகிறார். 23-ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு நாடு மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் பாரிஸ் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எட்வார்ட் பிலிப் மற்றும் அதிபர் இமானுவேல் மெக்ரான் ஆகியோரைச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசுகிறார்.
அன்றைய தினமே பிரான்ஸில் கடந்த 1950, 1950களில் இந்தியாவின் ஏர்இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் ஏராளமான இந்தியர்கள் பலியானார்கள். இவர்கள் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவரங்கில் அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதன்பின்னர் 25 ஆம் தேதி பிரான்சில் தொடங்கும் ஜி 7 நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.