Skip to main content

மக்களவையின் முதற்கூட்டம்: பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடி...

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றது.

 

modi sworn as mp in the first session of loksabha

 

 

அதைத் தொடர்ந்து கடந்த 31ஆம் தேதி மோடி தலைமையில்  நடந்த மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை 17-வது நாடாளுமன்ற மக்களவை முதல் முறையாக கூடியது.

இதில் பாஜக மூத்த எம்.பி. வீரேந்திர குமார் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பின்  மோடி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவரைத்தொடர்ந்து அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட அனைவரும் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்