Published on 25/05/2019 | Edited on 25/05/2019
மக்களவை தேர்தல் முடிந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. இதனையடுத்து வரும் 30 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாளை மோடி குஜராத் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, "நாளை மாலை குஜராத் செல்ல இருக்கிறேன். எனது தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளேன். நாளை மறுநாள் காலை என் மீது நம்பிக்கை காட்டிய வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்த அங்கு செல்ல இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.