இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.84.19 காசுகளாக இருந்த நிலையில் இன்று 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.84.39 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் நேற்று ரூ.77.25 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 1 லிட்டர் டீசல் விலை தற்போது 24 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.49 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். 10 ஆண்டுகளில் 238 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது போல அமெரிக்க டாலருடன் இந்திய மதிப்பு பெரும் சரிவை அடைந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.91 ரூபாயாக சரிந்துள்ளது.
இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சி குறித்து ஆராய்வதற்கான ஆய்வுக்குழு கூட்டம் வருகின்ற 15-ம் தேதி மோடி தலைமையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.