Published on 23/05/2019 | Edited on 23/05/2019
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து மே26 ஆம் தேதி குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க மோடி உரிமை கோருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெற்றிக்கு பின் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பெயருக்கு முன்னாள் சேர்ந்திருந்த சவுக்கிதாரை நீக்கியுள்ளார். தேர்தல் அறிவிப்பு வந்த போது நாட்டின் காவலாளி என கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பெயரை பதிவிட்ட மோடி, தற்போது தேர்தல் முடிந்தவுடன் அதனை நீக்கியுள்ளார்.