Skip to main content

முன்னாள் பிரதமர் வாஜ்பாயுக்கு மோடி இரங்கல்

Published on 16/08/2018 | Edited on 16/08/2018

 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று தற்போது (16.8.2018) காலமானார்.

 

 


இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் , ``வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல், ஒவ்வொரு இந்தியருக்கும், பா.ஜ.கவினருக்கும் இருக்கும். அவரின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது. வாஜ்பாய் தேசத்துக்காக வாழ்ந்து வந்தவர். அடல் ஜீ தலைமையில், 21ம் நூற்றாண்டின் வலுவான, வளமான உள்ளடக்கிய இந்தியாவின் அஸ்திவாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவரின் கொள்கை இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் தொட்டுள்ளது. அவரின் இறப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இழப்பு. அவருடன் பயணித்த எண்ணிலடங்கா நினைவுகள் என்னுள் இருக்கிறது. விடா முயற்சி மூலமாக பா.ஜ.கவை அவர் கட்டமைத்தார். பா.ஜ.கவின் கொள்கைகளைப் பரப்ப அவர் இந்தியா முழுவதும் பயணித்துள்ளார். அதனாலேயே, இப்போது பல மாநிலங்களில் பா.ஜ.க வலுவான சக்தியாக மாறியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்