Skip to main content

அயோத்தியில் மோடி... தொடங்கியது ராமஜென்ம பூமி பூஜை!!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020
modi

 

 

உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற உள்ளது. மோடி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து விமானத்தில் பிரதமர் மோடி புறப்பட்டு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

 

அதன்படி தற்பொழுது அயோத்தி வந்தடைந்தார். மாஸ்க் அணிந்திருந்த படி வந்த பிரதமரை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நிர்வாகிகள் தனிமனித இடைவெளியுடன் வரவேற்றனர். கைகளைக் கழுவிக் கொண்ட பிரதமர் மோடி கர்கி ஹனுமான் கோவிலில் பிரார்த்தனை நடத்தினார். அதன்பிறகு குழந்தை இராமரை தரிசித்த பிரதமர் மோடி பாரிஜாத மலர் செடியை நட்டு வைத்தார் பிரதமர் மோடி. தற்பொழுது ராமஜென்ம பூமியின், பூமி பூஜை விழா தொடங்கியது. ராமஜென்ம பூமி பூஜையில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளி அடிக்கல் நாட்ட இருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்