ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் புதுவையில் பா.ஜனதா ஆட்சியா: முதல்வர் நாராயணசாமி கேள்வி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த போது கூறியதாவது:-
ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் புதுவையில் பாரதிய ஜனதா ஆட்சி என்று கூறுவது வேடிக்கையானது. பாஜக புதுச்சேரியில் வேறூன்ற முடியாத கட்சி. பாஜக ஆட்சிக்கு வருவோம் எனக்கூறுவது அக்கட்சியின் விரக்தியின் போக்கு. இது பாஜகவின் பகல் கனவு நியமன எம்.எல்.ஏ. வழக்கு நிலுவையில் உள்ளது. குஜராத்தில் அனைத்து பலத்தையும் பயன்படுத்தினார்கள். ஆனால் அகமது படேல் மூலம் ஜனநாயகம் வென்றிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- சுந்தரபாண்டியன்