Skip to main content

சோனியா, ராகுல் காந்தியுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

 MK Stalin meets Sonia, Rahul Gandhi!

 

தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து நேற்று (17.06.2021) முதல்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தில் நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய நிலையில், இன்று டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை மு.க. ஸ்டாலின் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் மு.க. ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் இருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்