![shahid jameel](http://image.nakkheeran.in/cdn/farfuture/KHk6qSHHG9uG_BXxLfQzjhDOjJfMp-pPTR2nBm_ye_w/1621225658/sites/default/files/inline-images/b%20%284%29_2.jpg)
இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. மேலும், மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ்களும் பரவிவருகிறது. இதனையடுத்து மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ்கள் குறித்து கண்காணித்து, அதுகுறித்து ஆலோசனை வழங்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது.
இதன் தலைவராக மூத்த வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல் செயல்பட்டுவந்தார். இந்தநிலையில், இவர் அந்தப் பொறுப்பிலிருந்து திடீரென இராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இராஜினாமாவுக்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை.
இருப்பினும் ஷாஹித் ஜமீல் இராஜினாமா செய்ததற்கு, மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என்றும், கரோனாவைக் கையாளுவதில் மத்திய அரசின் கொள்கைகளை அவர் தொடர்ந்து விமர்சித்துவந்ததாகவும் கூறப்படுகிறது. அண்மையில் சர்வதேச பத்திரிகை ஒன்றுக்கு அவர் எழுதிய கட்டுரையில், ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகளை வகுப்பதில் இந்திய விஞ்ஞானிகள் பிடிவாதத்தை எதிர்கொள்கின்றனர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.