Skip to main content

400 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மைனர் பெண் - மகாராஷ்ட்ராவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

maharashtra

 

மைனர் பெண்ணை 400 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி நெஞ்சை உலுக்கி வருகிறது.

 

மகாராஷ்ட்ரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த மைனர் பெண். தாயில்லாமல் வளர்ந்த இவருக்கு அவரது தந்தை எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமண வாழ்வில் அவரது கணவராலும், அவருடைய உறவினர்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்டுள்ளார். 

 


இதனையடுத்து சில மாதங்களில் கணவன் வீட்டை வெளியேறி தனது தந்தையின் வீட்டுக்கு அந்த மைனர் பெண்ணை, அவரது தந்தை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கவே அவர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கத் தொடங்கியுள்ளார். அப்போதிலிருந்து பலரால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

 

மேலும் இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறை அதிகாரிகள் சிலரும் அந்த மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது அந்த மைனர் பெண், காவல்துறையிடம் தன்னை 400 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்துள்ளார்.

 

இதனையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் காவல்துறை, இதுவரை மூன்று பேரை கைது செய்துள்ளது. குழந்தை திருமண சட்டம், பாலியல் வன்கொடுமை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மைனர் பெண் தற்போது இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்