




Published on 13/12/2024 | Edited on 13/12/2024
கேரள மாநிலம், வைக்கத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்னிலையில், ‘வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா’ நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு துறை அமைச்சர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வைக்கத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் - ஜானகி சிலைக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். உடன் ஜானகியின் தம்பி மகன் தீபன் எம்ஜிஆர் உடன் இருந்தார்.