Skip to main content

வாட்ஸ்அப் ஆப்பை தவறாக பயன்படுத்தாதீர்; இந்திய அரசியல் கட்சிகளை எச்சரித்த வாட்ஸ்அப் நிறுவனம்...

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

 

tfhgtfhgtf

 

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த தேர்தலில் சமூகவலைதளங்கள் தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்காற்றும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக மும்முரமாக தயாராகி வரும் நிலையில், அவர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாட்ஸ்அப் சேவையை தற்போதுள்ள அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்துவதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து, ‘வாட்ஸ்அப்’ தகவல் தொடர்பு தலைவரான கார்ல் வோக் கூறுகையில், 'மக்களுக்காகவும், அவர்களின் தகவல் தொடர்புக்காகவும் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் சேவை தற்போது வேறு மாதிரியாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை சில அரசியல் கட்சிகள் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகின்றன. அதனால்தான் வாட்ஸ் அப் செயலியை தவறாக பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறோம். மேலும் தொடர்ந்து விதிமுறைகள் மீறப்பட்டால் வாட்ஸ்அப் சேவையை தடை செய்ய வேண்டியிருக்கும்' என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்