Skip to main content

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் பேரணி! - ஆந்திர அரசுக்கு குவியும் பாராட்டு

Published on 07/05/2018 | Edited on 07/05/2018

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் மாபெரும் பேரணி ஒன்றை மாநிலம் முழுவதும் நடத்திய ஆந்திர மாநில அரசுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சட்டத்தைக் கடுமையாக்கினாலும், இந்தக் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை. 

 

இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டிக்கும் விதமாக மாபெரும் பேரணி ஒன்றை அறிவித்தார். ‘பெண்களின் பாதுகாப்பிற்கான பேரணி நடத்துவோம்’ என்ற முழக்கத்துடன் இன்று இந்த பேரணி காலை, மாலை என இருவேளைகளில் நடைபெற்றது. காலையில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்ட இந்தப் பேரணியில் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் சட்டமேலவை உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாலை அமராவதியில் நடத்தப்பட்ட பேரணியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். 

 

 

ஆந்திர அரசின் இந்த முன்னெடுப்பை பலரும் பாராட்டியுள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யாத்ரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்