Skip to main content

முதலிடத்தில் தமிழகம், இரண்டாம் இடம் பிடித்த மகாராஷ்டிரா...

Published on 29/11/2018 | Edited on 29/11/2018

 

mar

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி மக்களுக்காக அரசு வேலை, கல்வி ஆகியவற்றில் 16 சதவீத இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மராத்தா இடஒதுக்கீடு என அழைக்கப்படும் இந்த இடஒதுக்கீடு மசோதா முதல்வர் தேவேந்திர பட்நாவிசால் இன்று மகாராஷ்டிர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 68 சதவீதம் இடஒதுக்கீடு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. 69 சதவீதம் இடஒதுக்கீடு கொண்ட தமிழகத்திற்கு அடுத்து, இந்தியாவில் அதிக இடஒதுக்கீடு உள்ள இரண்டாவது மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்