Skip to main content

300 ஏக்கரில் தனி ஆளாக ஒரு வனத்தை உருவாக்கிய நபர்...

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

மணிப்பூரில் சேர்ந்த வன ஆர்வலர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கடந்த 18 ஆண்டுகளில் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு வனத்தையே உருவாக்கியுள்ளார்.

 

manipur man creates a 300 acre forest

 

 

மேற்கு இம்பாலின் லேகைய்  கிராமத்தை சேர்ந்த மொய்ரெங்தெம் லோயா என்ற வன ஆர்வலர் ஒருவர் தான் பார்த்துக்கொண்டிருந்த மருந்து விற்பனை வேலையை ராஜினாமா செய்து விட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் வனத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். அவருக்கு வனத்துறை மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டன.

இதன் காரணமாக லங்கோல் மலைப்பகுதியில் சுமார் 17 ஆண்டுகளில் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு வனத்தையே அவர் உருவாக்கியுள்ளார். அழியும் தருவாயில் இருந்த 250 தாவர வகைகளை இந்த வனத்தில் அவர் வளர வைத்துள்ளார். இந்த வனத்தில் 25 வகையான மூங்கில், மூலிகை தாவரங்கள் ஆகியவற்றுடன் ஆயிரக்கணக்கான  பறவைகள், பூச்சியினங்கள், ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக திகழ்ந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்