நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், காரசார விவாதம் ஒன்றின் போது தமிழக எம்.பி மாணிக் தாகூர், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை நோக்கி வேகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்திய இளைஞர்கள் இன்னும் ஆறு மாதங்களில் பிரதமர் மோடியை தடியை கொண்டு அடிப்பார்கள் என்றார். அவரின் இந்த பேச்சுக்கு இன்றைய கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கண்டனம் தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் எம்.பி க்கள் கடும் கூச்சலிட்டனர். இந்த சூழலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். பதிலுக்கு பாஜக எம்.பி க்களும் குரல் எழுப்பினர்.
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர் அமைச்சர் இருக்கையின் அருகே வேகமாக சென்றார். இதனை அடுத்து, பாஜக உறுப்பினர்கள் அமைச்சரை சூழ்ந்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கடும் அமளியால் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார்.
‘Dande Maaro’ mentality of the Congress in action!
— Priti Gandhi (@MrsGandhi) February 7, 2020
When Dr Harshvardhan condemned Rahul Gandhi's derogatory statement, Congress MP Manick Tagore attacks him in the parliament! This misbehavior must be strongly condemned! pic.twitter.com/xvbNndwMXa