நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது. மாநிலத்தில் பாதி தொகுதிகளில் எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அவர், "எங்கள் கட்சி தலைவர்களை விலைக்கு வாங்க பாஜக ரெயில்கள் மூலமாக மேற்கு வங்கத்துக்குள் பணத்தை கொண்டுவருகிறது. எங்கள் தலைவர்களிடம் பேசும் பாஜக தலைவர்கள் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்ளுங்கள், எங்கள் கட்சியில் சேர்ந்து விடுங்கள் என்று கேட்கிறார்கள். மேலும் வங்கத்துக்கு ரெயில்களில் வந்து இறங்குகிறார்கள், அவர்கள் பெருமளவு பணத்தை மாநிலத்திற்குள் இறக்குகிறார்கள். இதனை வாக்காளர்களுக்கு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இவை அனைத்தும் எனக்கு தகவல்களாக வந்துகொண்டிருக்கின்றன” என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இனி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை எனவும் கூறினார்.