Published on 10/01/2022 | Edited on 10/01/2022
மத்தியப்பிரதேச மாநில காவல்துறையில், ஓட்டுநராகப் பணி புரிந்த கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா, அவரது நீளமான மீசையின் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச காவல்துறை சேர்ந்த உயரதிகாரிகள், நீளமான மீசையைக் குறைக்கும்படி ராகேஷ் ராணாவிற்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் தனது மீசையைக் குறைத்துக்கொள்ள ராகேஷ் ராணா மறுக்கவே, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகேஷ் ராணாவின் மீசை மற்ற காவல்துறையினர் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக இடைநீக்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், "நான் ஒரு ராஜ்புட். எனது மீசை எனது பெருமை" எனக் கூறியுள்ள ராகேஷ் ராணா, மீசையை மழித்துக்கொள்ளப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.