Skip to main content

காங்கிரஸ் ஆட்சிக்கவிழ்ப்பு பின்னணியில் பா.ஜ.க..? கசிந்த ஆடியோவால் வெடிக்கும் சர்ச்சை...

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

madhyapradesh bjp audio leak


மத்தியப்பிரதேசத்தில் அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க. ஆட்சியமைத்த சூழலில், பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான் குரல் போன்று ஒலிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 


மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா, தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கட்சியிலிருந்து விலகியதால், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனையடுத்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைத்தது. பா.ஜ.க. திட்டமிட்டு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டிவந்த நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா மூலம் ஆட்சியைக் கவிழ்ப்பது குறித்து சிவராஜ் சிங் சவுகான் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த ஆடியோவில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குரலில், “அரசைக் கலைக்க வேண்டும் என்பது மத்திய தலைவர்கள் எடுத்த முடிவு. இல்லையென்றால் அது அனைத்தையும் சீரழித்து விடும். சொல்லுங்கள், ஜோதிராதித்ய சிந்தியா, துளசி சிலாவத் இல்லாமல் ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா? எனக்குத் தெரிந்து வேறு வழி இல்லை” எனக் கூறுவது போலப் பதிவாகியுள்ளது. இந்த ஆடியோவில் உண்மைத்தன்மை குறித்து முடிவுகள் எதுவும் வெளியாகாத நிலையில், அம்மாநில அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்