உ.பி மாநிலத்தில் மேயருக்கும், மருத்துவர்களும் வாக்குவாதம் ஏற்பட்டதால், மருத்துவமனையை வளாகத்திற்கு புல்டோசர் கொண்டுவரப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கடந்த திங்கள் கிழமை பாஜக மேயர் சுஷ்மா காரக்வால் சென்றுள்ளார். அப்போது, அவர் தனது காலணியுடன் ஐசியூ அறைக்குள் சென்றுள்ளார். இதனை கவனித்த மருத்துவர்கள் மேயர் சுஷ்மா காரக்வாலை தடுத்து காலணியுடன் உள்ளே வரக்கூடாது என்று கூறி அவரது காலணியை(ஷூ) கழட்டுமாறு கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மேயருக்கும் மருத்துவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் மருத்துவமனை தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு புல்டொசர் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை வந்து நிலைமையை சரி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ள மருத்துவமனை இயக்குநர் முத்ரிகா சிங், மேயருக்கும், மருத்துவர்களுக்கும் எந்த விதமான வாக்குவாதங்களும் நடக்கவில்லை என்றும், மருத்துவர்களுடன் உரையாடிவிட்டுச் சென்றார் என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் இது குறித்து எந்தவிதமான தவறான தகவல்களையும் பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.