கல்லூரிப் பேருந்தும், சரக்கு லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலம், பிரஹாவி மாவட்டம், சிக்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கல்லுரிப் பேருந்தும், சரக்கு லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 75 மாணவிகளில் 15- க்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெலகாவி காவல்துறைக் கண்காணிப்பாளர் சஞ்சீவ் பாட்டில், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று ஆய்வு செய்தார். அத்துடன், படுகாயமடைந்த மாணவிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தினார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், கல்லூரி பேருந்தில் மாணவிகளை அதிகளவில் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்துக்கு அம்மாநில போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.