Published on 30/06/2018 | Edited on 30/06/2018

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் மஜத சட்டமன்ற உறுப்பினர்களின் வீட்டுக்குச் சென்று பாஜகவில் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களுருவில் பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய எடியூரப்பா, கர்நாடக பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறவே மக்கள் வாக்களித்தனர். அது நிறைவேறும் என்று அவர்கள் நம்புவதாக தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடக்க உள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் மோடியை வெற்றி பெறச் செய்ய, அதிருப்தியில் இருக்கும் காங் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை வீட்டிற்கே சென்று பாஜகவில் இணைத்து விடுங்கள் என்று கூறினார். இறுதியில், இது பொருந்தாத கூட்டணி தானாகவே கவிழும் என்பதால் பாஜக அவசரப்படவில்லை என்றார்.