இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வோருக்கு விசா கிடைப்பதில் நீண்ட தாமதம் நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வோருக்கு விசா கிடைப்பதில் நீண்ட தாமதம் நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. அமெரிக்க விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் புகார்கள் குவிந்து வருகின்றனர்.
விசா தாமதத்தால் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களும், மாணவர்களும் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சிலர் ஓராண்டுக்கு மேலாக விசாவிற்கு காத்திருப்பதாகவும், பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை வாஷிங்டனில் சந்தித்த பின், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உறுதியளித்துள்ளார்.
கரோனாவுக்கு பின் ஆட்குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் விசா தர தாமதமாவதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.