ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது சில சமயங்களில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது பாஜக எம்.பி ஒருவரும் அவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார். மேற்கு வங்கமாநிலத்தில் மல்டா நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்.பி யான காகென் முர்மு ஆன்லைனில் சாம்சங் போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். தீபாவளி அன்று அவர் வீட்டில் இல்லாதபோது வந்த ஆன்லைன் நிறுவன பிரதிநிதி, அவரது மனைவியிடம் 11,999 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு பார்சலை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய முர்மு, செல்ஃபோன் பெட்டியை வாங்கி ஆர்வமுடன் பிரித்து பார்த்துள்ளார். ஆனால் அதில் போனுக்கு பதிலாக கற்கள் இருந்துள்ளன. அதேபோல சாம்சங் அட்டைப்பெட்டிக்கு பதிலாக ரெட்மி நிறுவன அட்டைப்பெட்டியில் அது அனுப்பப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முர்மு மால்டாவில் உள்ள இங்க்லீஷ் பஜார் காவல்நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.