Published on 10/09/2018 | Edited on 10/09/2018

மத்தியபிரதேசம் மாநிலம் போபாலில் நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் மாறன் என்பவர் பைராகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார். அதாவது மத்தியபிரதேச பாஜக இளைஞரணி தலைவரான ராகுல் ராஜ்புட் என்பவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது துப்பாக்கி ஒன்றால் வானை நோக்கி சுட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.அந்த வீடியோ நேற்று வெளியாகியது அந்த வீடியோவில் தான் மட்டுமில்லாமல் தன் ஆதரவாளர்கள் கையிலும் துப்பாக்கியை கொடுத்து சுட செய்துள்ளார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து விசாரித்து வருகின்றனர்.