Skip to main content

ஹரியானாவின் சிர்சாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியது!

Published on 30/08/2017 | Edited on 30/08/2017
ஹரியானாவின் சிர்சாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியது!

சர்ச்சைக்குரிய சாமியார் ராம் ரஹீம் சிங் தனது பக்தைகளைக் கற்பழித்த வழக்கில், கடந்த வெள்ளிக்கிழமை குற்றவாளி என பன்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஹரியானாவில் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 32 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து ஹரியானாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. ஹரியானாவில் கலவரம் உருவாகும் வாய்ப்புள்ள ஏழு மாவட்டங்களில் இணைய வசதியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இணைய வசதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தேரா சச்சா சவுதா தலைமையகத்தில் இருந்த 2 - 15 வயதுள்ள சிறுமிகள் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இயல்பு வாழ்க்கை திரும்பியிருப்பது உற்சாகமளிப்பதாக ஹரியானாவின் சிர்சா வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்