Published on 08/12/2022 | Edited on 08/12/2022
குஜராத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதேபோல் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக என இருந்த குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் களம் ஆம் ஆத்மியின் வருகையில் மும்முனை போட்டியாக மாறியது.
இமாச்சல பிரதேசத்தில் 68 தொகுதிகள் உள்ளன. அதில் ஆட்சியமைக்க 35 தொகுதிகள் தேவை. 4 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 26 தொகுதிகளிலும், சுயட்சைகள் 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியான பாஜகவை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.