Skip to main content

எல்.ஐ.சி. பங்குகளை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கும் பணி தொடக்கம்! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

LIC The task of allocating shares to investors!

 

எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கு வெளியீட்டில் பங்குகளை வாங்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு பங்குகளை ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

 

முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பங்கு ஒதுக்கீடு செய்யும் பணி இன்றுடன் (12/05/2022) முடிவடைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கு விற்பனையில் விண்ணப்பித்தவர்களுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தால், அவை அவர்களின் டிபேட் கணக்கில் வரும் மே 16- ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம், பங்குகள் ஒதுக்கப்படவில்லையென்றால், வங்கிக் கணக்கில் பங்குகள் விலைகேற்ப முடக்கப்பட்ட பணம் நாளை (12/05/2022) விடுவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் மே 17- ஆம் தேதி அன்று எல்.ஐ.சி.யின் பங்குகள் இந்தியச் சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதற்கிடையே, எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கு விற்பனையை ரத்துச் செய்யக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  

 

சார்ந்த செய்திகள்