தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேரலை விவாத நிகழ்ச்சியில் பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விவாத நிகழ்ச்சியில் மவுலானா இஜாஸ் கஸ்மி என்பவர் முத்தலாக்கிற்கு ஆதரவாக கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் முத்தலாக்கிற்கு எதிராக பராஹ் பைஸ் என்ற பெண் வழக்கறிஞர் கலந்துகொண்டு விவாதித்தார். அப்போது பெண் வழக்கறிஞர்," குரானில் முத்தலாக் என்ற ஒன்று விவாதத்திற்காக அங்கீகரிக்கப்பட்டது அல்ல" என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் நேரலை நிகழ்ச்சியிலேயே ஏற்பட, கடைசியில் சண்டை ஏற்பட்டது. பெண் வழக்கறிஞர் முதலில் மவுலானவை அறைய, பின்னர் மவுலானா அந்த பெண் வழக்கறிஞரின் கன்னத்தில் அறைந்தார்.
இதுதொடர்பாக அந்த தனியார் நிகழ்ச்சி அளித்த புகாரின் பேரில் மவுலானவை காவலர்கள் கைது செய்துள்ளனர். தற்போது அந்த நேரலை விவாத நிகழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவிடுவருபவர்கள். முதலில் மவுலானவை அந்த பெண் வழக்கறிஞர் தான் தாக்குகிறார் என்றும் கண்டிக்கின்றனர்.
இந்த வீடியோ காட்சி தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பலர் மவுலானாவின் செயலை கண்டித்து வருகின்றனர். சிலர் அந்த பெண்தான் அடிக்க தொடங்கியுள்ளார் என்றும் விமர்சிக்கின்றனர்.