Skip to main content

முன்னாள் முதல்வர் லாலுவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது- டாக்டர் உமேஷ்

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
lalu prasad yadav


ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சர் அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ராஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக லாலுவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை நீட்டித்துள்ளது ஜார்கண்ட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே ஊழல் வழக்குக்காக வீடியோ கான்பிரன்ஸ் மூலம் டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் லாலு இன்று ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் லாலுவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவிற்கு ஏற்கனவே ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.
 

இதற்கிடையில், லாலுவுக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் உமேஷ் கூறுகையில், சர்க்கரை நோயாளியான லாலுவுக்கு கடந்த 2 முதல் 3 நாட்களாகா உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவு திடீரென அதிகரித்து காணப்படுகிறது. அதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டுள்ளார் ஆனாலும் அவரது சர்க்கர் அளவு குறையவில்லை. இதன் காரணமாக வலது காலில் அவருக்கு புரோடியம் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறோம் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்