பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை அனுப்பி ராஜுக்குமார் என்கிற மேற்குவங்கத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்ய முயன்றது. அதை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காரணம் சாரதா சிட்பண்ட் முறைகேடு. இந்த சாராத சிட்பண்ட் முறைகேடு பற்றி பரபரப்பான வீடியோக்களை கோடநாடு விவகாரத்தை போலவே வெளியிட்டவர் மேத்யூ சாமுவேல். அவர் மம்தாவின் இந்த நடவடிக்கைகளை பற்றி வீடியோ வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில்
இப்பொழுது நம் நாடு பல்வேறு சட்ட நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடிகள் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்குமாக இடையிலான நெருக்கடிகளாக உள்ளது. மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தின் வாயிலாக சென்று சிபிஐ விசாரணை மூலம் சாரதா சிட்பண்ட் முறைகேட்டில் தீர்வுகாண முயற்சி எடுத்து வருகிறது.
2013-ல் பெங்காலில் இயங்கி வந்த சாராத சிட்பண்ட் 10 ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றி மோசடி செய்தது. இதில் உறுப்பினர்களாக இருந்த சுமார் 20 லட்சம் பேர் ஏமாற்றப்பட்டனர். ஏமாந்த மக்கள் காவல்நிலையங்களில் புகார்கள் கொடுத்தனர். ஊடங்கள்கூட பேச ஆரம்பித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. திரினாமுல் காங்கிரஸ் தலைவர்கள், சில போலீஸ் அதிகாரிகள் மற்றும் முதல்வர் அலுவலகம் உட்பட அனைத்திற்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிறது. இதில் ஏமாற்றப்பட்ட மக்களில் 95 சதவிகிதத்தினர் மிகவும் ஏழைகள்.
வெஸ்ட்பெங்கால் முதல்வர் மம்தா பானர்ஜி கல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் விசாரணையை துவக்கினார். ஆனால் அந்த விசாரணையில் மிகமுக்கிய ஆவணங்கள் கிடைத்தும் அவை அழிக்கப்பட்டு, பெயருக்கு சிலர் கைது செய்யப்பட்டனர். இதை நான் பத்திரிகையாளனாக நிரூபித்தேன்.
சாரதா ஸ்ட்ரிங் ஆப்பரேஷனில் ஒரு வருடத்திற்கு முன்பே குற்றப்பத்திரிகை சிபிஐயால் தயாரிக்கப்பட்டும் அதை சமர்ப்பிக்க அவர்களுக்கு விருப்பமில்லை. இப்போது நான் சொல்லவிரும்புவது என்னவென்றால், மம்தா மக்களிடம் ஜனநாயகத்தை காக்க வேண்டும், நாட்டை பாதுகாக்க வேண்டும் என மம்தா சொல்லுவது குப்பை பொய். அவர் அவரை சுற்றியுள்ள ஊழல்வாதிகளை காப்பாற்றவே நினைக்கிறார். அவர் நடத்தும் நாடகங்கள் அப்படிதான் உள்ளது. இந்த விவகாரத்தில் என்மீது பொய் வழக்குகள் போடப்பட்டது. நான் இந்த விவகாரத்தில் விசாரணையை தூய்மையான,நேர்மையான பத்திரிகையாளனாக மேற்கொண்டேன்.
இப்பொழுது திரும்பவும் இந்த விவகாரம் பேருருவம் எடுத்துள்ளது. என்ன நடக்கும் என பார்ப்போம் எனக்கூறியுள்ளார்.