புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி 16 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 சட்டமன்றத் தொகுதிகளிலும், பாஜக 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல், காங்கிரஸ் - திமுக கூட்டணி 8 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 2 சட்டமன்றத் தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. மேலும், 6 சட்டமன்றத் தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, ஐந்திலும் தோல்வி அடைந்துள்ளது.
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி கைப்பற்றிய நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராக பதவியேற்கிறார். புதுச்சேரியில் நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார் ரங்கசாமி என்பது குறிப்பிடத்தக்கது.