
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது.
வடமாநிலங்களை பொறுத்தவரையில் தலைநகர் டெல்லியில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,008 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,831 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 50 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,165 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 24,449 பேர் மருத்துவமனையில் கரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 74,217 சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.