Published on 20/08/2018 | Edited on 20/08/2018
கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாகப் பெய்து வந்த தொடர் மழை குறையத் தொடங்கியது. இந்த மழையிலும், வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை. 6லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், கடற்படை, விமானப்படை, தீயணைப்பு படையினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி மாடியில் தஞ்சம் புகுந்த இரு பெண்களை விமானப் படை வீரர் விஜய் வர்மா ஹெலிகாப்டர் மூலம் அவர்களை மீட்டார். அவருக்கு நன்றிதெரிவிக்கும் வகையில், வீட்டின் மொட்டைமாடியில் 'தேங்க்ஸ்' என்று பெயிண்டால் எழுதியுள்ளனர்.