Skip to main content

விதிகளை மீறி கட்டிய குடியிருப்புகள் வெடி வைத்து அகற்றம்!

Published on 12/01/2020 | Edited on 12/01/2020

கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக சர்ச்சையில் சிக்கிய மரடு அடுக்குமாடி கட்டிடம் நேற்று (11.01.2020) இடிக்கப்பட்டது. 
 

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நேற்று (11.01.2020) இதன் பணிகள் தொடங்கியது. 
 

kerala state Cochin illegal building delhi supreme court order


நேற்று (11.01.2020) தொடங்கிய கட்டிட இடிப்பு பணிகள் இன்றும் தொடர்ந்தது. இதையடுத்து மரடு சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள இந்த 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் உள்ளன. இதனை இடிக்கும் பணிகள் நேற்று (11.01.2020) தொடங்கியது. 19 மாடிகள் கொண்ட முதல் கட்டிடம் வெடிமருந்து மூலம் இடிக்கப்படும் வீடியோ வெளியானது. அதில் சுமார் 9 வினாடிகளில் 19 மாடி கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 
 

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் (12.01.2020) கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்றது. கொச்சி மரடுவில் ஜெயின்ஸ் கோரல் கோவ் இரு அடுக்குமாடி குடியிருப்புகளும் வெடிவைத்து அகற்றப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
 

மற்றொரு கட்டிடமான கோல்டன் காயலோரம் குடியிருப்புகள் இடிக்கும் பணி இன்று மதியம் தொடங்கும் என்று தகவல் கூறுகின்றன. 
 



 

சார்ந்த செய்திகள்