இந்தியா முழுவதும் கரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் கரோனா பரவல் அதிகமாக இருந்துவருகிறது. மேலும், கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் 40 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் கேரளாவிற்குச் சென்ற மத்தியக் குழுவும், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் அதிகமான பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆராயப்பட்டுவருவதாகக் கூறியிருந்தது. இந்தநிலையில், நேற்று (25.08.2021) மட்டும் கேரளாவில் 24,296 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியானது.
இந்தநிலையில், கேரளாவில் இன்று 31,445 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவில் ஓணம் போன்ற பண்டிகைகளை முன்னிட்டு அண்மையில் கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகளாலேயே தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.