Skip to main content

அலுவலகம் அதேதான், பணி மட்டும் வேறு... தூய்மைப் பணியாளர் டூ பஞ்சாயத்துத் தலைவர்!  

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

anandhavalli

 

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்கள், இந்தியாவின் இளம்வயது மேயரைத் தந்தது மட்டுமில்லாமல், 10 வருடங்களாக பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதி நேரத் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தவரை அந்தப் பஞ்சாயத்திற்கே தலைவராக அமரவைத்துள்ளது.

 

கேரளாவின் கொல்லம் மாவட்டம், பதனபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவரான ஆனந்தவள்ளி, இன்று தான் கூட்டிப் பெருக்கிய அலுவலகத்திலேயே தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். பதனபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில், 2011 ஆம் ஆண்டு, மாதம் 2,000 ரூபாய்க்கு பகுதி நேரத் தூய்மைப் பணியாளராகச் சேர்ந்த இவர், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்புவரை மாதம் 6,000 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

 

தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வெற்றிபெற்றுள்ள ஆனந்தவள்ளி, கண்களில் கண்ணீரோடு தலைவர் நாற்காலியில் அமர்ந்தார். பஞ்சாயத்துத் தலைவர் பொறுப்பில் அமர்வது குறித்து அவர், "எனது கட்சியால் மட்டுமே இதுபோன்ற செயல்களைச் செய்யமுடியும். நான் அதற்கு உண்மையிலேயே கடன்பட்டிருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

              

 

 

சார்ந்த செய்திகள்