Skip to main content

தொடர்ந்து உயரும் நிலச்சரிவு பலி எண்ணிக்கை...

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

kerala landslide updates

 

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

 

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்னர் நள்ளிரவில் கேரள மாநிலம் மூணாறு அருகே பெட்டிமுடிப் பகுதி எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

 

பத்து நாட்களைக் கடந்தும் இன்னும் மீட்புப்பணி நடைபெற்றுவரும் நிலையில், தினமும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் தோட்டத் தொழிலாளர்களின் 20 வீடுகள் முழுமையாகச் சேதம் அடைந்துள்ள சூழலில், காணாமல் போன மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்