Skip to main content

கேரள நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு நிபந்தனை ஜாமீன்!

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
கேரள நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு நிபந்தனை ஜாமீன்!

கேரள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

கேரள நடிகை கடத்தல் வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். தன்னை ஜாமினில் விடுவிக்கக்கோரி அவர் தாக்கல் செய்த 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், ஐந்தாவது முறையாக அவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திலீப் கைதாகி 85 நாட்கள் ஆகியும் போலீசார் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததையடுத்து, அவரை ஜாமீனில் விடுவிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்