பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர்.
அதற்காக இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானை கைது செய்யப்பட்டு, 2 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் காஷ்மீரில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
காஷ்மீரில் டூடா பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் இன்று இதற்கான தேர்வு நடைபெறுகிறது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 2000 இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்காக அங்கு குழுமியுள்ளனர்.
அப்போது அங்கு பேசிய ஒரு இளைஞர், "இந்திய ராணுவத்தில் சேருவதற்கு நான் இங்கு வந்திருக்கிறேன், ராணுவத்தில் சேர்ந்து என் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் சேவை செய்ய விரும்புகிறேன். இந்தியாவின் விங் கமாண்டர் அபினண்டன் பாகிஸ்தானிய இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, பின்னர் இந்தியா திரும்பினார். அவர் எங்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரது விவகாரம் இளைஞர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. அதுவே அவர்களை இந்திய ராணுவத்தில் சேர ஊக்குவித்தது" என கூறினார்.