Skip to main content

கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

 Karthi Chidambaram's pre-bail petition dismissed

 

கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

கடந்த மே 17 ஆம் தேதி ரூபாய் 50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரின் ஆடிட்டர் பாஸ்கரராமன் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதில், ஆடிட்டர் பாஸ்கரராமனை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கடந்த 26 ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார். இந்நிலையில் விசா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். கார்த்தி சிதம்பரம் மற்றும் அமலாக்கத்துறையின் வாதங்கள் முடிந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்