இந்தியா மற்றும் சீனா இடையேயான 2- வது உச்சி மாநாடு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இரு நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். அதனை தொடர்ந்து மாநாடு அக்டோபர் 11- ஆம் தேதி தொடங்கி, 13- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் இடம் குறித்து, இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்
வெளியாகவில்லை.
யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம் பெற்றுள்ள மாமல்லபுரம். இந்த உச்சி மாநாடு நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டால், தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மாமல்லபுரம் பிரபலமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.