Published on 06/09/2019 | Edited on 08/09/2019
இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்திய சந்திராயன் 2 விண்கலம் நாளை அதிகாலை 01.30 மணியளவில் நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கிறது. இந்த நிகழ்வை இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் வந்தடைந்தார்.
அதனை தொடர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பீனியா பகுதியில் அமைந்துள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு சென்று 'விக்ரம் லேண்டர்' நிலவில் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் 70 மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார். பிரதமருடன் கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா மற்றும் ஆளுநர் வஜூபாய் வாலா ஆகியோர் இஸ்ரோ மையத்திற்கு செல்கின்றனர்.