Skip to main content

தொடங்கியது கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்; 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

 Karnataka Legislative Assembly Election Begins; 1 lakh policemen for security

 

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு இன்று (10.05.20230) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன.

 

இன்று காலை 7 மணியிலிருந்து தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். 5.21 கோடி வாக்காளர்களுக்காக 58,545 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் சுமார் ஒரு லட்சம் போலீசாரும், தேர்தல் பணியில் 4 லட்சம் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

 

ஆண் வேட்பாளர்கள் 2430 பேர், பெண் வேட்பாளர்கள் 185 பேர் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இன்று பதிவாகும் வாக்குகள் மே 13 ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் ஆணையத்தால் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

 

தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோவன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரும் போட்டியிடுகின்றனர். கல்புர்கி மாவட்டம் சித்தாபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கேவும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி சன்னப்பட்டினா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். எச்.டி.தேவகவுடா பேரன் நிகில் குமாரசாமி ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்