புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஓய்வு பெற்ற அதிகாரி பாலகிருஷ்ணனை நியமிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பொறுப்பேற்ற பாலகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 02- ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய அதிகாரி நியமிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதுதொடர்பாக அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி, ‘சட்டப்பேரவையில் ஒப்புதல் அளித்து நியமிக்கப்பட்ட அதிகாரி நீக்கப்பட்டு புதிய அதிகாரி நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், உள்ளாட்சி துறை செயலாளர் மற்றும் இயக்குனர் மலர்க்கண்ணன், சார்பு செயலாளர் ஆகியோர் இந்த உள்ளாட்சி மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தில் உரிமை மீறல் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி சட்டப்பேரவையில் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் புகார் மனு அளித்தார்.
இதுதொடர்பாக புகார் பெறப்பட்டு அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவை வளாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.