Skip to main content

“காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொந்த ஊரில் 50 வாக்குகள் கூட வாங்காதது எப்படி?” - கமல்நாத் கேள்வி

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

KamalNath Questioned on How come Congress MLAs don't even get 50 votes in their hometown?

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.

 

அதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே போல், மிசோரமில் ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதில், 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் 163 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 66 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் அம்மாநிலத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கமான போட்டி இருக்கும் என கணித்த நிலையில், காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது அக்கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதனிடையே, இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சிப் பொருத்தப்பட்ட இயந்திரத்தை ஹேக் செய்து தேர்தல் முடிவை மாற்ற முடியும் என்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருந்தார். அதே போல், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொந்த ஊரில் 50 வாக்குகள் கூட வாங்காதது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்நாத், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவர்களது சொந்த கிராமத்தில் 50 வாக்குகள் கூட பெறவில்லை என்று சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம்?. இதுபற்றி ஆலோசனை நடத்தாமல் ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது. முதலில் இது பற்றி அனைவரிடமும் பேசுவேன். மக்களின் மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக தான் இருந்தது. உங்களுக்கு கூட தெரியும் என்ன மனநிலை என்று. ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?. மக்களிடம் கேளுங்கள்” என்று கூறினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்